மாணவனை தாக்கி கார் கண்ணாடி உடைப்பு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் தனுஷ் வித்யானந்த், 22. கர்நாடகா மாநிலம், பொம்மனஹள்ளி ஆக்ஸ்போர்டு கல்லுாரியில், எம்.பி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார்.கடந்த, 18ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, சின்ன எலசகிரியில் உள்ள பேக்கரி அருகே தன் காரை நிறுத்தியிருந்தார். இது குறித்து, ஓசூர் சின்ன எலசகிரி மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் கூலித்தொழிலாளி பெருமாள், 23, கேள்வி எழுப்பினார்.அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பெருமாள், பைக் சாவியால் தனுஷ் வித்யானந்தை தாக்கி, அவரது காரின் இடது புற ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரது புகார்படி, சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, தலைமறைவான பெருமாளை தேடி வருகின்றனர்.