மேலும் செய்திகள்
2ம் நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்
27-Nov-2024
கிருஷ்ணகிரி, டிச. 18-கிருஷ்ணகிரியில், போலி மருத்துவர்களின் மருத்துவத்தால் கல்லுாரி மாணவி உயிரிழந்ததாக கூறி, மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவத்திடம், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூரை சேர்ந்தவர் நித்யா, 18, கல்லுாரி மாணவி. உடல்நலம் பாதித்த அவரை கடந்த, 2 நாட்களுக்கு முன், போலி மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமான நிலையில் அந்த மாணவி உயிரிழந்துள்ளார். இது குறித்த விபரங்களுடன் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம். கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளனர்.
27-Nov-2024