உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊஞ்சல் விளையாடிய மாணவன் கழுத்தில் கயிறு இறுக்கி பலி

ஊஞ்சல் விளையாடிய மாணவன் கழுத்தில் கயிறு இறுக்கி பலி

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே, ஊஞ்சல் கட்டி விளையாடிய, 5ம் வகுப்பு மாணவன் கழுத்தில் கயிறு இறுக்கி, மூச்சு திணறி பலியானான்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணியை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணி - -அலமேலு தம்பதியின், 3வது மகன் கதிர்வேல், 10. அருணமதி அரசு நடுநிலைப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன், வீட்டருகே உள்ள வேப்பமரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடினான். அப்போது, கயிறு அவனது கழுத்தில் இறுக்கியது. அதில், சிக்கிய கதிர்வேல், மூச்சுத்திணறி மயங்கினான். அருகிலிருந்த உறவினர்கள் மாணவனை மீட்டு, காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை