உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தெரு நாய் தொல்லையால் மாணவர்கள், மக்கள் அவதி

தெரு நாய் தொல்லையால் மாணவர்கள், மக்கள் அவதி

தெரு நாய் தொல்லையால் மாணவர்கள், மக்கள் அவதிஊத்தங்கரை, செப். 29-ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுற்றித்திரியும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் செல்லும் போது நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை புள்ளி விபரப்படி மாதத்திற்கு, 50 முதல், 60 பேர் வரை தெரு நாய்கள் கடித்து, சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஊத்தங்கரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள தாசில்தார் அலுவலகம், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக, தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை