உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வனக்கோட்டத்தில் கோடை பயிற்சி முகாம்

ஓசூர் வனக்கோட்டத்தில் கோடை பயிற்சி முகாம்

ஓசூர் :ஓசூர் வனக்கோட்டம் சார்பில் கடந்த, 19 முதல் 24 வரை பள்ளி மாணவர்களுக்கான, 6 நாள் கொண்ட கோடை பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் முகாமை துவக்கி வைத்தார். இதில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், 26 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காடுகள் பாதுகாத்தல், வன உயிரினங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பற்றிய அனுபவங்களை வனத்துறையினர் எடுத்துக் கூறினர்.தொடர்ந்து மாணவ, மாணவியர், தேன்கனிகோட்டையில் அழிந்து வரும் உயிரினமான நாற்கொம்பு மான் மற்றும் ஆற்று நீர்நாய்க்கான மேலகிரி இன்க்யூபேஷன் மையத்தை பார்வையிட்டனர். ஜவளகிரியிலுள்ள தேவர்பெட்டா வனப்பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பெங்கி அருவி, அங்குள்ள இயற்கை எழில்கள் மற்றும் அதன் உயிரியல் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்து கொண்டனர்.பறவைகளை கண்டறிதல், கொடகரையிலுள்ள குதிராயன் மலையேற்றத்துடன், 4ம் நாளில் உலக பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது. 5ம் நாளில், மாணவர்கள் பிலிகுண்டுலு சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, ஆற்று நீர்நாய், முதலைகள் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவ, மாணவியர் காவிரி நதியில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். நிறைவு நாளில் மாணவர்கள் அய்யூர் பகுதியில் அமைக்கப்பட்ட எஃகு கம்பி வேலி அமைப்பை பார்வையிட்டனர். அப்போது, மனித- விலங்கு மோதல்களை தடுக்கும் முக்கிய முயற்சி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், உதவி வனப்பாதுகாவலர் யஷ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கர் மற்றும் ராஜமாரியப்பன், உதவி வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு) ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை