உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என, நீர்வ-ளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் பெய்து வரும் மழையால், கர்நாட-காவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 19,027 கன அடியாக உள்ளது. அணை பாது-காப்பு கருதி நேற்று முன்தினம் இரவு, அணையிலிருந்து வினா-டிக்கு, 16,750 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,257 கன அடி என, 2 அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 19,007 கன அடியாக அதிகரித்து உள்-ளது. இந்த தண்ணீர், இன்று மாலைக்குள் தமிழகத்திற்கு வந்தடையும் என, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிலுள்ள மத்திய நீர்வ-ளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,000 கன அடியாக உள்ளது. இதனால், மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்த-ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ