உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அகற்றுவதாக தாசில்தார் உறுதி

அகற்றுவதாக தாசில்தார் உறுதி

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, சோளகாப்பட்டியில், அரசு மயானம் கோரி அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் நேற்று சோளக்காப்பட்டி கிராமத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு கிராம கணக்கில் உள்ள சர்வே எண் படி அரசு மயானத்தின், 64 சென்ட் இடத்தை பார்வையிட்டு, மக்களிடம் கேட்டறிந்தார்.அரசு மயானத்திற்கு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அதனை அகற்றி மயானத்திற்க்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதில், கிராம நிர்வாக அலுவலர் கவியரசு மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !