மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காத்த-வராயன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட பொருளாளர் நந்தகுமார் பேசினார்.இதில், ஜனநாயக வழியில் போராடும் தமிழ்நாடு நெடுஞ்சா-லைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகளை, வீடு புகுந்து கைது செய்யும் போலீசார் நடவடிக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நிர்மலா சகுந்தலா, சங்கர், சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Jul-2025