மேலும் செய்திகள்
ரூ.5 லட்சம் கோடி முதலீடு அதானி குழுமம் அறிவிப்பு
08-Sep-2025
சென்னை :''இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, தெற்காசிய புதுப்பிக்கத்தக்க மின் வழித்தடம் அமைக்க, தமிழகம் தயாராக உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மத்திய அமைச்சகங்கள் நடத்தும் ஆறாவது சர்வதேச எரிசக்தி மாநாடு நேற்று புது டில்லியில் நடந்தது. இதில், தமிழக அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில், தமிழகம், 25,500 மெகா வாட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி திறனில், 11,500 மெகா வாட் உடன் இரண்டாவது இடத்திலும், சூரியசக்தி மின் உற்பத்தி திறனில், 10,700 மெகா வாட் உடன் நான்காவது இடத்திலும் உள்ளது. கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, தமிழகம் முக்கிய இடமாக உள்ளது. தமிழக கடலுக்குள், 35,000 மெகா வாட்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திறன் உள்ளது. இந்தியா, இலங்கை இணைந்து, மன்னார் - மதுரை இடையே, 400 கிலோ வோல்ட் திறனில் மின் வழித்தடம் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.மதுரை - மன்னார் இணைப்பு, தமிழகத்தின் மாசற்ற எரிசக்தி ஆற்றல் முன்னணியை வலுப்படுத்துகிறது. இந்த திட்டம், தமிழகம் மற்றும் இலங்கையை இணைத்து, தெற்காசியாவில் எல்லை கடந்த புதுப்பிக்கத்தக்க மின்சார பரிமாற்றத்திற்கு முன்னுதாரணமாக அமைகிறது. இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, தெற்காசிய புதுப்பிக்கத்தக்க மின் வழித்தடத்தை அமைக்க, தமிழகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
08-Sep-2025