பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ
சேந்தமங்கலம்: 'பிரம்ம கமலம்' பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் ஒரு அபூர்வ பூவாகும். இந்த செடியை, சேந்தமங்கலம் மேற்கு சின்னக்குளம் அருகே வசிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. இதையறிந்த ஊர் மக்கள் பலரும், தொழிலாளி வீட்டிற்கு நேரில் சென்று, பிரம்ம கமலம் பூவை பார்த்து ரசித்து சென்றனர்.