மேலும் செய்திகள்
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
15-Jul-2025
கிருஷ்ணகிரி, கலெக்டராக விருப்பம் தெரிவித்த, 3ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு, தன் அலுவலகத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் சுற்றிக்காண்பித்து, வாழ்த்து கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மணியம்பாடியை சேர்ந்த மாணவி திஷியா, 8. இவர் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இல்லாத நிலையில், தன் பாட்டி யுடன் வசிக்கிறார். இவர், கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெற வேண்டி, கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் நேற்று வந்தார். அங்கு குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகத்திற்கு சென்ற மாணவி, அங்குள்ள அலுவலர்களை சந்தித்தார். தானும் படித்து, கலெக்டர் ஆக போவதாக கூறினார். அங்கிருந்த அலுவலர்கள் மாணவி திஷியாவை, கலெக்டர் தினேஷ்குமாரிடம் அழைத்துச் சென்றனர்.அப்போது, தானும் கலெக்டராக வேண்டும் எனக்கூறிய மாணவியை, அழைத்து சென்ற கலெக்டர் தினேஷ்குமார், தன் அலுவலக அறையை சுற்றி காண்பித்தார். பின் அலுவலக நுழைவாயிலுக்கு வந்த அவர், தன் காரின் முன் இருக்கையில் மாணவியை அமர வைத்து, கலெக்டர் அலுவலகத்தை சுற்றி காண்பிக்க செய்தார். பின்னர், நன்றாக படித்து, கலெக்டர் ஆக வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
15-Jul-2025