மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
15-May-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சண்முக செட்டி தெருவில் இருந்து, நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.காலை, 7:30 மணிக்கு காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து, திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை ஊர்வலம் நையாண்டி மேளத்-துடன் புறப்பட்டனர். இதில், விநாயகர் வேடம் அணிந்தும், பொய்க்கால் குதிரையுடன் ஏராளமானோர் பங்கேற்றனர். மதியம், 12:00 மணிக்கு நெடுங்கல் கிராமத்தில் உற்சவமூர்த்தி திரவுபதி அம்மன் மற்றும் போத்துராஜா சுவாமிகள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் போத்துராஜாவிற்கு அபி ேஷகம், ஆராதனை நடந்தது. இன்று (ஜூன் 14) காவேரிப்பட்டணம் சண்முக செட்டி தெருவில் இருந்து காலை, 5:00 மணிக்கு, வெங்கடாஜலபதி முன்னி-லையில், சிகை நீக்கும் நிகழ்ச்சி, 10:30 மணிக்கு ஊர்வலமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை, சிகை நீக்கிய சிறுவர்களுக்கு காதணி விழா நடக்க உள்-ளது. ஏற்பாடுகளை, அழகுடையான் மகரிஷி கோத்திரத்தார் குடும்பத்தினர் செய்துள்ளனர்.
15-May-2025