கிணற்றில் விழுந்த விவசாயி பலி
கிருஷ்ணகிரி, டிச. 17-காவேரிப்பட்டணம் அடுத்த ஆத்துகாரன்கொட்டாயை சேர்ந்தவர் முனியப்பன், 33, விவசாயி. கடந்த, 15ல், அப்பகுதியில் உள்ள கிணற்று ஓரமாக நின்று குளித்து கொண்டிருந்தபோது தவறி கிணற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.