உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீட் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற மெட்ரிக் பாடத்திட்டத்தை அரசு தரம் உயர்த்த வேண்டும்

நீட் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற மெட்ரிக் பாடத்திட்டத்தை அரசு தரம் உயர்த்த வேண்டும்

கிருஷ்ணகிரி, ''நீட் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற, மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தை அரசு தரம் உயர்த்த வேண்டும்,'' என, பர்கூரில் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், அ.தி.மு.க., எம்.பி.,யுமான தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: மாநில பட்டியலில் இருந்த கல்வி கடந்த, 1976ல், இந்திரா ஆட்சியில் தான் மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதை இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறது. நீட் தேர்வை, அ.தி.மு.க., கொள்கை ரீதியாக வேண்டாம் என்றாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறோம். கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மாணவர்கள் படிப்பர். நீட் தேர்விலும் வெற்றி பெறுவர். அதை விடுத்து சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்விதரத்தை குறைக்க கூடாது.மத்திய அரசு கல்விக்கொள்கை வேண்டாம் எனக்கூறும், தி.மு.க., அரசு கடந்த, 4 ஆண்டுகளில், 252 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அனுமதியை வழங்கிவிட்டு, மத்திய அரசை குறை கூற கூடாது. மாநில அரசிடமும் கல்விக்கொள்கை உள்ளது. அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட சிறப்பாக்குங்கள். இரு கோடுகள் என்ற படத்தில் வருவதை போல, உங்கள் கோட்டை பெரிதாக்குங்கள். மாநில அரசிடமும் அதிகாரம் உள்ளது. உங்கள் பாடத்திட்டத்தை சிறப்பாக கொடுங்கள். அதன்பின் இருமொழி கொள்கையையும், நமது உரிமையையும் பாதுகாத்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ