உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆண்டுக்கணக்கில் சர்வீஸ் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

ஆண்டுக்கணக்கில் சர்வீஸ் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி, ஜஆண்டுக்கணக்கில், சர்வீஸ் சாலையில் கழிவுநீர் ஓடுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூர் அருகே துவங்கும் சர்வீஸ் சாலையில் இருந்து, அவதானப்பட்டியில் முடியும் சர்வீஸ் சாலை வரை, மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்ல, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால், இப்பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள், மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக செல்ல வழியின்றி, ஆண்டுக்கணக்கில் சாலையோரம் ஓடுகிறது.மேலும் தேசிய நெடுஞ்சாலை குறுக்‍கே பல இடங்களில், தரைப்பாலத்தின் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் பெருகி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதியில் கொசுக்கள் பரவி நோய் தொற்றும் அதிகரித்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் புகார் தெரிவித்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சர்வீஸ் சாலையில் கழிவுநீர் செல்ல, போர்க்கால அடிப்படையில் கால்வாய் அமைக்க, அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !