மேலும் செய்திகள்
அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
23-Aug-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை யில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது.பழைய கடைவீதி, கச்சேரி தெரு,கோட்டை முனியப்பன் கோவில் தெரு, காமராஜ் நகர், கலைஞர் நகர், நாராயண நகர் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூழ், கலசம், மாவிளக்கு பூஜை பொருள்களுடன் ஊர்வலமாக பம்பை, மேல வாத்தியங்களுடன் பராசக்தி மாரியம்மன் கோவிலில் கலசங்களுக்கு படையலிட்டு, கொப்பரையில் கூழ்ஊற்றி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.விழா ஏற்பாடுகளை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், பராசக்தி மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
23-Aug-2025