மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
27-Jan-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவில் வளாகத்தில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு என, முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும் பிப்., 8 மாலை, மாணவ, மாணவியருக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.பின், புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக சுந்தரம், பொதுச்செயலாளர் குருபிரசாத், பொருளாளர் வெங்கடேசன், கவுரவ தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர்கள் ரங்கநாதன், குமார், சுரேஷ், இணை செயலாளர் மணிகண்டன், மகளிரணி செயலாளர் ஜெயந்தி ஸ்ரீதரன், இளைஞரணி செயலர் நாகராஜன் மற்றும், 12 நிர்வாகக்குழு உறுப்பினர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சங்கரின், கல்வி சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
27-Jan-2025