மேலும் செய்திகள்
பவுர்ணமி பூஜை
11-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், பாண்டுரங்கர்-ருக்மணி திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள, பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரமோற்சவ விழா கடந்த, 5ம் தேதி காலை அபிேஷக ஆராதனையுடன் துவங்கியது. 6ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிேஷக ஆராதனை, 7 முதல், 10 வரை, விட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று காலை பாண்டுரங்கர்-ருக்மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின், பாண்டுரங்கர் பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு தேரில் அலங்காரத்துடன், விட்டல் ரகுமாய், அம்பா பவானி உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
11-Jul-2025