உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்த்திருவிழாவையொட்டி பச்சை குளத்தில் தெப்ப உற்சவம்

தேர்த்திருவிழாவையொட்டி பச்சை குளத்தில் தெப்ப உற்சவம்

ஓசூர்: ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்-வரர் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 13ல் சுவாமி திருக்கல்யாணம், 14ல் தேரோட்டம் மற்றும் நேற்று முன்-தினம் இரவு ராவண வாகன உற்சவம், பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், தேர்ப்பேட்டையிலுள்ள பச்சை குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்திக்கு வாச்-சீஸ்வர குருக்கள் மூலம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அலங்கரிக்-கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டு, தெப்பக்கு-ளத்தை சுற்றி மூன்று முறை வலம் கொண்டு வரப்பட்டது. பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், கோவில் செயல் அலுவலர் சாமி-துரை உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர். பக்தர்கள் பலர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி தெப்பக்குளத்தில் விட்டனர். உப்பு, நவதானியங்களை குளத்தில் போட்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை