மேலும் செய்திகள்
கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
28-Sep-2024
உடைகற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் காரிமங்கலம், அக். 20-தர்மபுரி மாவட்ட கனிமவள துறையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, கனிமவளத்துறை உதவி ஆய்வாளர் புவனமாணிக்கம், ஆர்.ஐ., அருணகிரி, ஆகியோர் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி அருகே, நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதன் ஓட்டுனர் தப்பி சென்றார். லாரியை சோதனை செய்ததில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உடைகற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்
28-Sep-2024