உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.12.87 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.12.87 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராயக்கோட்டை, பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு கார் மற்றும் ஜீப்பில் கடத்திய, 7.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல் சேலத்தில், 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான, ராயக்கோட்டை அருகே காடுசெட்டிப்பட்டியில், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, ஹூண்டாய் கிரிட்டா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடகா மதுவை கடத்தியது தெரிந்தது. கார் டிரைவர் தப்பியோடிய நிலையில், 4.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 638 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 6,240 ரூபாய் மதிப்புள்ள, 96 பாக்கெட் கர்நாடகா மதுபானம் ஆகியவற்றுடன் காரை பறிமுதல் செய்தனர்.அதேபோல், ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார், உடையாண்டஹள்ளி ரயில்வே கேட் அருகே, வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, குஜராத் மாநில பதிவு எண் கொண்ட மகேந்திரா தார் ஜீப்பை சோதனை செய்தபோது, 3.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 440 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 6,240 ரூபாய் மதிப்புள்ள, 96 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது. பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தியதை, ஜீப்புடன் கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் வாலிபர்கள் சேலம், வீராணம் போலீசார் நேற்று, சுக்கம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த காரை மறித்தபோது நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் உடனே விரட்டிச்சென்று, சிறிது துாரத்திலேயே காரை மடக்கினர்.விசாரித்தபோது, காரில் இருந்தவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மெகர் சிங், 25, அசோக் ராணா, 28, என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து, 12 மூட்டைகளில், 425 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரிந்தது. அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். காருடன், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி