ஜூஜூவாடி அரசு பள்ளிக்கு கழிவறைகள் ஒப்படைப்பு
ஓசூர்,ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மாணவ, மாணவியருக்கு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதை ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் நர்மதாதேவி தலைமை வகித்தார்.ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், கழிவறைகளை திறந்து வைத்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.