ஓசூரில் மேம்பால பணியால் போக்குவரத்து மாற்றம்
ஓசூர்:கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலம் கடந்த ஜூன், 21ம் தேதி பழுதானது. அதில், 4 பேரிங் பொருத்தி சீரமைக்கும் பணிகள் இன்று (ஆக.18) துவங்குகிறது. அதற்காக நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தொடர் விடுமு-றைக்கு ஊருக்கு சென்ற மக்கள், இன்று அதிகாலை முதல், பெங்-களூரு திரும்பும் நிலையில், போக்குவரத்து மாற்றத்தால் சிரமப்-படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால், போக்குவரத்து மாற்றம் குறித்து, போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி வழியாக, பெங்களூரு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், ஓசூர் சீத்தாராம்மேட்டிலிருந்து ரிங்ரோட்டில் திரும்பி, பெங்களூரு செல்ல வேண்டும். பஸ்கள், பயணிகள் வாகனங்கள், சீத்தாராம்மேட்டிலிருந்து, தமிழ்நாடு ஓட்டல் சந்-திப்பு வழியாக அனுமதிக்கப்படும். பெங்களூரு நோக்கி செல்லும், 4 சக்கர வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், ஒரு பாதையில் மட்டும் அனுமதிக்கப்படும். அதற்காக சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள், கனி ஓட்டல் முதல், தமிழ்நாடு ஓட்டல் வரை, இரு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.அதன் பின், 3 பாதைகளையும் அணுகலாம். காலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, ஓசூர் நகர் பகுதிக்குள், டிப்பர் லாரிகள், மல்டி ஆக்சில் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்-கப்படாது. ஜி.ஆர்.டி., மேம்பாலத்திற்கு அடியில், எந்த வாகனங்-களும் செல்ல அனுமதிக்கப்படாது. பாகலுாரிலிருந்து ஓசூர் வரும் வாகன ஓட்டிகள், ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள அமேரியா பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, ஓசூருக்குள் வர வேண்டும். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சர்வீஸ் சாலைக்கு செல்ல, தளி ஜங்ஷன் மேம்பாலத்திற்கு அடியில் சென்று திரும்பி வர வேண்டும்.ஓசூர் நகரில், வணிகர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் (நண்-பகல், 12:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மற்றும் இரவு, 10:00 முதல், காலை, 6:00 மணி வரை) பொருட்களை ஏற்றவும், இறக்கவும் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.