உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்தில், கெலமங்கலம், தளி, சூளகிரி, ஓசூர் ஒன்றியங்களில் உள்ள அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 39 பேருக்கு, சிறந்த பள்ளி மேலாண்மை குழு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம், ஓசூர் தெலுங்கு மற்றும் கன்னட நடுநிலைப்பள்ளி கள் வளாகத்தில் நேற்று நடந்தது.பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டு, பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.மாநில கருத்தாளர்களான நாகராஜ், கண்ணன் ஆகியோர், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி மேலாண்மை குழுவின் சிறந்த செயல்பாடுகள், குழுவை மேலும் வலுப்படுத்துதல், சிறப்பாக செயல்படும் பள்ளி களின் அனுபவங்கள் எடுத்துரைக்கப்பட்டது.புதிய பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் குறித்து, விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில், சுரேஷ் மற்றும் கலைதாஸ் ஆகியோர், தங்களது கருத்துகள் மற்றும் பயிற்சி குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஓசூர் வட்டார வள மைய பயிற்றுனர் செந்தில் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !