மேலும் செய்திகள்
தொடர் மின்வெட்டை சரிசெய்ய கோரிக்கை
27-May-2025
ஊத்தங்கரை, தமிழகம் முழுவதும், 'குரூப் - 4' தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் தேர்வர்களின் கையெழுத்து மாறுபடுதல் மற்றும் அவர்கள் கையெழுத்து போடாமல் விடுவதால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வருவாய் துறை சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., ஓ.எம்.ஆர்., ஷீட் எளிய முறையில் பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.மண்டல துணை தாசில்தார் ஜெயராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், பிரிவு அலுவலர் நேரு, உதவிப்பிரிவு அலுவலர் குணசேகரன் ஆகியோர், ஓ.எம்.ஆர்., ஷீட்டை தேர்வர்கள் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து எடுத்துரைத்தனர்.
27-May-2025