மேலும் செய்திகள்
பால்குட ஊர்வலம்
11-Sep-2025
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டையில், 1990 அக்., 10ல், அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடந்த ஸ்ரீராமஜோதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சங்கர், பாபு, நரசிம்மைய்யா, திம்மராயன் ஆகிய, 4 ராம பக்தர்கள் இறந்தனர். அவர்களது, 35ம் ஆண்டு நினைவஞ்சலி, தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் நான்கு ரோடு நினைவு சின்னம் அருகே நேற்று நடந்தது.முன்னதாக, தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, கோட்டை வாசல் நினைவு சின்னம் வரை, இந்து அமைப்பினர் ஜோதியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் வெங்கடேஷ், விஷ்ணுகுமார், பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2025