மேலும் செய்திகள்
தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை
30-Nov-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தண்டேகுப்பத்தை சேர்ந்தவர் ராஜகோபால், 46. கர்நாடக மாநிலம், மங்களூருவில், பி.எஸ்.என்.எல்., மொபைல் டவர் அமைக்கும் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். இவர், தண்டேகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார், 28, என்பவரை கூலி வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், வேலை முடிந்த பிறகும் கூலி தரவில்லை. இது குறித்து கடந்த, 13ல், ராஜகோபாலிடம் விஜயகுமார் கேட்டபோது, அவரை ராஜகோபாலும் அவருடன் இருந்தவர்களும் சேர்ந்து தாக்கினர். படுகாயம் அடைந்த விஜயகுமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ராஜகோபால், 46, அசோக்குமார், 20, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
30-Nov-2025