உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு ரூ.10.96 லட்சம் கல்விக்கடன்

கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு ரூ.10.96 லட்சம் கல்விக்கடன்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 396 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார்.தொடர்ந்து, காவேரிப்பட்டணம் அடுத்த, பன்னிஹள்ளிபுதூரை சேர்ந்த, தசைசிதைவு நோயால் பாதித்த சர்வேஷ் என்ற, 7-ம் வகுப்பு மாணவனுக்கு, சிறிய அளவிலான மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலி, வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வேப்பனஹள்ளி அடுத்த கொத்த கிருஷ்ணப்பள்ளியை சேர்ந்த கல்லுாரி மாணவர் விக்னேஷ், ஓசூர், கோபசந்திரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி சத்யா ஆகியோருக்கு, 10.96 லட்சம் ரூபாய் கல்விக்கடனுக்கான ஆணைகளை வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், துணை கலெக்டர் (பயிற்சி) க்ரீதி காம்னா, மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை