உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு

பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், கார்த்திகேயன், 32. இவர் வாணியம்பாடியில் வனவராக பணியாற்றினார். அதே பகுதியில் வன காப்பாளரான பணியாற்றியவர் திவாகர், 27. இருவரும் நேற்று மாலை, 6:00 மணிக்கு ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையை கடந்து சென்றனர். அப்போது, பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை சென்ற கர்நாடக அரசு பஸ், அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !