உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளியை கத்தியால் தாக்கிய நண்பர்கள் இரண்டு ‍பேர் கைது

தொழிலாளியை கத்தியால் தாக்கிய நண்பர்கள் இரண்டு ‍பேர் கைது

ஓசூர், ஓசூர் அருகே புனுகன்தொட்டியை சேர்ந்த முருகேசன், 32. கூலித்தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், 31, திம்மசந்திரத்தை சேர்ந்த மணி, 30, ஆகியோரும் நண்பர்கள்; கடந்த, 23ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் மற்றும் மணி ஆகியோர், கத்தி, கோடாரியால் முருகேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், தலை, மார்பு பகுதியில் காயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, மஞ்சுநாதன், மணி ஆகியோரை, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ