கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு வசூல் எஸ்.எஸ்.ஐ., உள்பட இருவர் சஸ்பெண்ட்
போச்சம்பள்ளி: தேசிய நெடுஞ்சாலையில், கோவிலுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி கல்லா கட்டிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்-டனர்.கர்நாடக மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவ ட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில் இருந்து, கிருஷ்ணகிரி, மத்துார், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக, அதிகளவு மக்கள் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில், மேல்மலையனுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி கோவில்களுக்கு தை அமாவாசை, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில், வாகனங்களில் செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் தை அமாவாசை என்பதால், கர்நாடக மாநிலத்-திலிருந்தும், ஓசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் இருந்தும் மத்துார் வழியாக சுவாமி தரிசனம் செய்ய, டிராவல்ஸ் வாகனங்-களில் மக்கள் சென்றனர். மத்துார் டோல்கேட் அருகே, அந்த வாகனங்களை நிறுத்தி, நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., திருணாகரன், போலீஸ்காரர் சர-வணன் ஆகிய இருவரும், பணம் வசூலிக்கும் வீடியோ வைரலா-னது.இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை விசா-ரணை மேற் கொண்டு, எஸ்.எஸ்.ஐ., திருணாகரன், போலீஸ்காரர் சரவணன் ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தர-விட்டார்.