உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முகாமிட்ட 85 யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு

முகாமிட்ட 85 யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு

ஓசூர் ; கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து, 85க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்கு சமீபத்தில் இடம் பெயர்ந்தன. இதில், 50க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 15க்கும் மேற்பட்ட யானைகளும், ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. இவை, வனத்தையொட்டிய விளை நிலங்களில் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மூன்று வனச்சரகத்திலும் பல குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை ஒன்றிணைத்து, கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டும், இதுவரை முடியவில்லை.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த யானைகள், வனத்துறையினர் கண்காணிப்பையும் மீறி, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. இவை, அருகிலுள்ள ஓசூர் வனச்சரகத்திற்கு இடம் பெயர வாய்ப்புள்ளதால், பயிர் சேதம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ