ஊத்தங்கரை அரசு பள்ளிகளுக்கு பெஞ்சல் புயலால் விடுமுறை
ஊத்தங்கரை அரசு பள்ளிகளுக்கு'பெஞ்சல்' புயலால் விடுமுறைஊத்தங்கரை, டிச. 1-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 'பெஞ்சல்' புயலால், காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், 12 மணியளவில் அதிக மழை பெய்ததால்,நேற்று ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்து வந்த நிலையில், விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், பள்ளி குழந்தைகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். காலை முதல், சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.