மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
28-Jul-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமோட்டூர் வனக்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த, 23 காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அம்-மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கங்கையில் கரகம் அலங்காரம் செய்து அம்மன் உற்சவ சுவாமி மற்றும் கரகத்துடன் அம்மன் தேர் நகர்வலம் நடந்தது. இதில், சின்னமோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். பின்னர் நடந்த தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
28-Jul-2025