வனமுனி ஐயனார் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி, பர்கூர் ஒன்றியம், கொல்லப்பள்ளி இருளர் காலனி அருகிலுள்ள பெரியமலை என்னும் வனத்தில் அமைந்துள்ளது வனமுனி ஐயனார் கோவில். இங்கு, ஆதிவாசி இருளர் குலதெய்வங்கள் வனதேவதை அம்மன் மற்றும் வனமுனிஐயனார் காவல் தெய்வங்களின் திருவிழா கடந்த மாதம், 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள், 27 முதல், கரகம் சுமந்து பல்வேறு ஊர்களுக்கும் சென்று விட்டு, கடந்த, 5ல் வனத்திற்கு சென்று, தேன், கிழங்கு, பூக்கள் சேகரிக்கும் நிகழ்வு நடந்தது. 8ல் ஜெகதேவியும், 9ல் கொல்லப்பள்ளி பெரியமலை ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று, வனதேவதை அம்மன் வனமுனி ஐயனாருக்கு சீர்வரிசையை, சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைத்தல், இருளர் குட்டையில் இருகரகங்கள் தலைகூடுதல் நிகழ்ச்சி நடந்தது.அனைவரும் பச்சாடை உடுத்தி, ஏராளமான ஆட்டை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். சுவாமி வந்த பக்தர்கள், பலியிட்ட ஆட்டின் ரத்தத்தை குடித்தனர். வரம் வேண்டி பக்தர்கள் தரையில் படுத்துக் கொள்ள, கரகம் சுமந்து வந்த பூசாரி, அவர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கினார். இன்று காலை, இரு கரகமும் கங்கையில் விடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.