உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி

ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை :கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக உள்ள ஒற்றை யானைகள், வனத்தை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி கிராமங்களுக்குள் தினமும் ஒற்றை யானை வந்து செல்வதால், பயிர்கள் சேதமாவதுடன், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை கிராம மக்களை விரட்டியது. மக்கள் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.நேற்று காலை ஆலஹள்ளி கிராமம் அருகே ஏரியில் முகாமிட்ட ஒற்றை யானை, அங்கிருந்த மக்களை விரட்டியதால் பீதியில் உள்ளனர். யானைகள் வராமல் தடுக்க, வனத்தில் சோலார் வேலி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி