உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 4,000 கன அடியாக குறைந்துள்ளது.தமிழக - கர்நாடக காவிரி நீர்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 4,000 கன அடியாக குறைந்துள்ளது. மெயின்பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணித்து ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !