மேலும் செய்திகள்
கெலவரப்பள்ளி அணையில் 2,200 கன அடி நீர்திற
20-May-2025
ஓசூர்,ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1,121 கன அடியாக சரிந்தாலும், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட நீரால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு நேற்று, 6வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தது.கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 19ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வரத்தான, 2,200 கன அடி நீரும், அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை அணைக்கு வரத்தான, 1,121 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 6வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், ரசாயன நுரை பெருக்கெடுத்து துர்நாற்றம் வீசியது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என, வருவாய்த்துறையினர் எச்சரித்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி, கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
20-May-2025