உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 789 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து, 869 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து மொத்தம், 869 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா மாநிலத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள் அதிகமாக வந்ததால், நேற்று அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீரில், அதிகளவு ரசாயன நுரை ஏற்பட்டு, கடும் துர்நாற்றத்துடன் தேங்கி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ