உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து பர-வலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்-தினம் அணைக்கு, 703 கன அடி நீர் வந்த நிலையில், பரவலான மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிக தண்ணீர் திறப்பாலும், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு, 1,151 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 668 கன அடி என மொத்தம், 847 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.15 அடியாக நீர்-மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி