உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 527 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 560 கன அடியாக அதிகரித்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.05 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்கள் மூலம், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 381 கன அடி என மொத்தம், 560 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும், பாரூர் ஏரி முழு உயரமான, 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 34 கன அடி நீர், கால்வாய்களில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு, 2வது நாளாக நீர்வரத்து, 30 கனஅடியாக உள்ளது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.60 அடியாக நீர்மட்டம் உள்ளது. சூளகிரி சின்னாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர்திறப்பும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை