ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு காவிரியாற்றில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல், ஒகேனக்கல், காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து நேற்று, ஆற்றில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு வரும் உபரி நீர், அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10 மணிக்கு, 9,500 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்து நாட்களுக்கு பின் நேற்று, காவிரியாற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையெடுத்து, சுற்றுலா பயணிகள் மெயின் பால்ஸ், சினி பால்ஸில் குளித்து மகிழ்ந்தனர்.