உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ரவுண்டானா, பெங்களூரு சாலையில் இளை-ஞரணி மாவட்ட அலுவலகம் அருகில், லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் என, மூன்று இடங்களில், தி.மு.க., இளைஞரணி சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் மேற்கு அஸ்லாம், கிழக்கு வேலுமணி, துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து, தர்பூசணி, நீர் மோர், குளிர்பானங்கள், பழ வகைகள் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார். மாநில விவசாய அணி துணை செயலர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலர் கோவிந்தன், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்-திரி கடலரசு மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மத்தின், ராஜ்குமார், அப்பு, பப்லு, பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி