உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்

குடிநீர் தரம் பரிசோதிக்க அதிகாரிகள் செயல்விளக்கம்

குடிநீர் தரம் பரிசோதிக்கஅதிகாரிகள் செயல்விளக்கம்ஓசூர், டிச. 8-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் பாதிப்பால், குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, மாநகராட்சி, டவுன் பஞ்.,க்கள் மற்றும் ஒன்றியங்களில், குளோரினேசன் அளவு சரியாக பராமரிக்க, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் குடிநீர் தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில், 42 பஞ்., தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு, குடிநீர் தரம் பரிசோதிக்கும் முறை குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் நேற்று செயல்விளக்கம் அளித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம், பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிராஜ், உதவி பொறியாளர் மகேந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி