உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியில் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாயில், முதல்போக சாகுபடி பாசனத்திற்கு, 2,400 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், நேற்று முதல், வரும் நவ., 16ம் தேதி வரை, 130 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பாரூர், அரசம்பட்டி, பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பஞ்.,க்கு உட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் நீர்வளத்துறையினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !