உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி

கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி

ஓசூர்: கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், கட்சி நிர்-வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். ஓசூர் மாநகராட்சி, 4 பகுதிகளில் உள்ள, 45 வார்டுகள், ஒன்றி-யத்தில் உள்ள, 179 பஞ்.,க்கள், தேன்கனிக்கோட்டை, கெலமங்-கலம் டவுன் பஞ்.,க்களில் உள்ள, 33 வார்டுகள் உட்பட மொத்தம், 662 இடங்களில், இனிப்பு, நலத்திட்ட உதவி, அன்ன-தானம், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், மரக்கன்று நடுதல், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கருணா-நிதி பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும். அதேபோல், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி துண்டு பிர-சுரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ