11 பேருக்கு ரூ.8.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 233 மனுக்களை வழங்கினர். தொடர்ந்து, 3.90 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருவருக்கு ஆட்டோவும், தொழிலாளர் நலத்துறை சார்பில், 10 பேருக்கு, 4.93 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் என, 11 பேருக்கு 8.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.