கிருஷ்ணகிரிக்கு செப்., 2வது வாரத்தில் முதல்வர் வருகை விழா மேடை, பந்தல் பணிகள் துவக்கம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில்,
செப்., 2வது வாரத்தில் நடக்கவுள்ள அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின்
பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை, பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.தமிழக
முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை
புரிவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை
அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார்,
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், தளி,
இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்
அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செப்., 2வது வாரத்தில் வருகை புரிந்து,
புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து,
நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். ஓசூரில் நடக்கும் முதலீட்டாளர்கள்
மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்கிறார். பல்வேறு துறைகள் சார்பில்,
நலத்திட்ட உதவிகள் பெறுவோருக்கு அனைத்து வித முன்னேற்பாடுகள்
செய்வது உள்ளிட்ட, அனைத்து பணிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு ஆடவர் கலை கல்லுாரி அருகே அமைக்கப்படும் மேடை பணியை துவக்கி வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ.,
சாதனைக்குறள், மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம்,
சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மகளிர் திட்ட அலுவலர் பெரியசாமி,
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், முன்னாள்
எம்.எல்.ஏ., முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிர்வாகிகளிடம் 'வீடியோ கான்பிரன்சிங்'
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி நிர்வாகிகளிடம் அமைச்சர் சக்கரபாணி வீடியோகான்பிரன்சில் பேசி, முதல்வர் வருகையை ஒட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து இன்று, 31ம் தேதி கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதியில் வீடியோ கான்பிரன்சில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.