மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
ஓசூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் துர்கா பூமிஜி, 36. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரில் கடந்த, 15 ஆண்டுகளாக தங்கி, பில்டிங் கான்டிராக்டராக வேலை செய்கிறார். இவர் கடந்த, 24ம் தேதி, அசாம் சென்று விட்டு ரயிலில் ஓசூர் திரும்பினார். அப்போது ரயிலில் பயணித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா, 50, என்பவர் தனக்கு வேலை வேண்டும் என, துர்கா பூமிஜியிடம் கேட்டுள்ளார்.அதனால், ஓசூர் சின்ன எலசகிரி அம்பேத்கர் நகரில் நடந்து வரும் கட்டடத்தில் வேலை கொடுத்தார். அங்கேயே தங்கியிருந்த கிருஷ்ணா, கடந்த, 25 அதிகாலை, 3:00 மணிக்கு, எதிர்பாராதவிதமாக, 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.