உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 46. கூலித்தொழிலாளி; இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வரு-கிறார். அந்த வீட்டிற்கு நேற்று மதியம், 12:30 மணிக்கு, பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரும்பு பைப் பொருத்திய பெயின்ட் அடிக்கும் உருளை, வீட்டின் மேலே செல்லும் மின் கம்பியில் உரசியதால், முனியப்-பாவை மின்சாரம் தாக்கியது.இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட குடும்பத்தினர், தேன்க-னிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரி-சோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி-வித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை